திமுக தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப 5-ம் தேதி பேரணி என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன் பின் மெரினாவில் அஞ்சலி செலுத்தியவுடன் மு.க.அழகிரி கூறுகையில், கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர.என்னுடைய ஆதங்கம் குடும்பத்தை பற்றியது அல்ல, கட்சியை பற்றியது.என்னுடைய ஆதங்கத்தை அப்பாவிடம் தெரிவித்துள்ளேன் என்று பரப்பராக கூறினார்.
ஆனால் திமுக தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் வரும் 26ம் தேதி(அதாவது நேற்று ) வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
அதேபோல் நேற்று நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில் செயல் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
பின் நாளை நடைபெறும் தி.மு.க பொதுக்குழுவில் கூடி மனுவை ஆய்வு செய்து தலைவராக மு.க ஸ்டாலின் அறிவிக்கப்படுவார்.
ஆனால் மு.க.அழகிரி தலைமையில் செப்டம்பர் 5 ஆம் தேதி மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு அமைதி பேரணி நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார்.
அவர் கூறுகையில், என்னை இணைப்பதாக தெரியவில்லை என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில், செப்டெம்பர் 5ஆம் தேதி பேரணிக்கு பிறகு அடுத்தக்கட்ட முடிவை அறிவிப்பேன். நேரம் வரும் போது எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவேன்.அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.
பின்னர் மதுரை சத்ய சாய்நகர் வீட்டில் ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசனை ஈடுபட்டார் . மதுரை, நெல்லை, குமரி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த ஆதரவாளர்கள் ஆலோசனையில் பங்கேற்றனர்.அதில், செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள அமைதி பேரணியில், பலத்தை காட்டும் வகையில், கூட்டத்தை திரட்டுவது குறித்தும், தி.மு.க., பொதுக்குழுவில், ஸ்டாலினுக்கு எதிராக, போர்க்குரல் எழுப்புவது குறித்தும், ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.தொடர்ந்து அழகிரி ஆலோசனை நடத்தினார்.
செய்தியாளர்களிடம் ஆலோசனைக்கூட்டத்திற்குப்பின் பேசிய மு.க.அழகிரி, அண்ணா, கருணாநிதி ஆகியோர் வளர்த்த திமுகவில் சேருவதற்கு கதவை தட்டுவதில் எந்தவித தவறும் இல்லை என்றார்.
சென்னையில் வரும் 5ம் தேதி தமது தலைமையில் நடக்கும் அமைதிப் பேரணி, திமுகவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார். இதன் பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன் என கூறியுள்ள மு.க.அழகிரி, திமுகவில் தம்மை சேர்க்காவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி படுதோல்வியை சந்திக்கும் என்றும் எச்சரித்தார்.
அதேபோல் நேற்றும் அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.அந்த ஆலோசனைக்கு பின்னர் மு.க.ஸ்டாலின் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தது குறித்து மு.க.அழகிரி கூறுகையில்,அது பற்றி என்னிடம் ஏன் கேள்வி கேட்கிறீர்கள். அவரது வேட்பு மனுவுக்கு என்னை முன்மொழியச் சொல்கிறீர்களா என்று ஆவேசமாக பதில் கூறினார். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் இடைத் தேர்தல் வந்தால் வேட்பு மனு தாக்கல் செய்வேன் என்று அதிரடியாக கூறினார்.
இந்நிலையில் இன்று மீண்டும் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது அவர் கூறுகையில், கருணாநிதி இல்லாததால் கட்சியை காப்பாற்ற களம் இறங்கியிருக்கிறோம். கட்சியில் எங்களை சேர்க்கவில்லை என்றால் அதன் விளைவுகளை திமுக சந்திக்க நேரிடும் . திமுக தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப 5-ம் தேதி பேரணி என்றும் தெரிவித்துள்ளார்.
DINASUVADU
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…