திமுக தலைவர் ஸ்டாலின் தான்….!அழகிரியை கட்சியில் இணைத்தால் தான் நாங்களும் பணிபுரிவோம் …! அழகிரிக்கு ஆதரவாக களமிறங்கிய திமுக முன்னாள் மேயர்

Published by
Venu

மு.க.ஸ்டாலின் திமுக தலைவரானவுடன்  திடீரென மு.க.அழகிரி ஆதரவாளர் பி.எம்.மன்னன் கட்சியில் அழகிரியை சேர்ப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பின் திமுக தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் ஆகஸ்ட் 26ம் தேதி(அதாவது நேற்று முன்தினம் ) வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
அதேபோல் நேற்று முன்தினம் நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில் செயல் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு செல்வதற்கு முன் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார் மு.க.ஸ்டாலின்.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அண்ணா அறிவாலயம் செல்வதற்கு முன் தாய் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின்.
Related image
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. பொதுக்குழு கூட்டத்தில் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன் பின் திமுக தலைவராக மு.க.ஸ்டாலினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பொதுச்செயலாளர் க.அன்பழகன்.இதனால் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.அதேபோல் திமுக பொருளாளராக துரைமுருகன் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டார்.
மேலும் திமுக செயல் தலைவர் பதவிக்கான கட்சி விதி பிரிவு 4 நீக்கப்பட்டதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
இதன் பின் திமுக தொண்டர்கள் அனைவரும் ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து இனிப்புகள் வழங்கியும்,பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் கட்சியில் தன்னை சேர்க்க வலியுறுத்தி முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.அழகிரி அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார்.அதேபோல் நேற்று அவர்  கூறுகையில், திமுக தலைவர் கருணாநிதி இருந்தபோது என்னை கட்சியில் இணைப்பதற்கு சிலர் தடுத்து வந்தனர்.தற்போது கருணாநிதி இல்லாததால் கட்சியை காப்பாற்ற களம் இறங்கியிருக்கிறோம். கட்சியில் எங்களை சேர்க்கவில்லை என்றால் அதன் விளைவுகளை திமுக சந்திக்க நேரிடும் . திமுக தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப 5-ம் தேதி பேரணி என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது திடீரென மு.க.அழகிரி ஆதரவாளர் பி.எம்.மன்னன் கட்சியில் அழகிரியை சேர்ப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், “திமுக தலைவர் ஸ்டாலின் தான். அழகிரியை கட்சியில் இணைத்தால் இணைந்து பணியாற்றத் தயார்” என்று திடீரென பல்டி அடித்துள்ளார் அழகிரியின் ஆதரவாளர்  பி.எம்.மன்னன்.இவர் மதுரை மாநகராட்சி முன்னாள் துணைமேயர் ஆவார்.
இதனால் என்ன மாற்றம் நிகழும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
DINASUVADU 

Published by
Venu

Recent Posts

அன்புமணி vs ராமதாஸ் : “உனக்கு விருப்பம் இல்லைனா அவ்வளவு தான்”..மேடையில் நடந்தது என்ன?

புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…

26 minutes ago

நீ ஜெயிச்சிட்ட மாறா! சதம் விளாசிய நிதிஷ் குமார் ரெட்டி…கண்கலங்கிய தந்தை!

மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும்  "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…

27 minutes ago

ஞானசேகரன் குறித்து மா. சுப்பிரமணியன் ஏன் விளக்கமளிக்கவில்லை? அண்ணாமலை கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…

1 hour ago

ராமதாஸ் – அன்புமணி மோதல் : “எல்லாம் சரியாகிவிடும்”..எம்.எல்.ஏ.அருள் பேச்சு!

சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…

2 hours ago

தந்தை ராமதாஸ் உடன் வார்த்தை மோதல்! பனையூரில் தனி அலுவலகம் தொடங்கிய அன்புமணி!

விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…

3 hours ago

வன்கொடுமை விவகாரம்: மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தர

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…

3 hours ago