திமுக தலைவர் மு.க.அழகிரி …!வெடித்தது சர்சை …!பீதியில் திமுக
விக்கிபீடியாயாவில் திமுகவின் தலைவர் மு.க.அழகிரி என குறிப்பிடப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது .
கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன் பின் மெரினாவில் அஞ்சலி செலுத்தியவுடன் மு.க.அழகிரி கூறுகையில், கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர.என்னுடைய ஆதங்கம் குடும்பத்தை பற்றியது அல்ல, கட்சியை பற்றியது.என்னுடைய ஆதங்கத்தை அப்பாவிடம் தெரிவித்துள்ளேன் என்று பரப்பராக கூறினார்.
ஆனால் திமுக தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் வரும் 26ம் தேதி(அதாவது நேற்று ) வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
அதேபோல் நேற்று நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில் செயல் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
பின் நாளை நடைபெறும் தி.மு.க பொதுக்குழுவில் கூடி மனுவை ஆய்வு செய்து தலைவராக மு.க ஸ்டாலின் அறிவிக்கப்படுவார்.
இந்நிலையில் விக்கிபீடியாயாவில் திமுகவின் தலைவர் மு.க.அழகிரி என குறிப்பிடப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது .
நாளை திமுகவின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாகிறார் என்ற நிலையில் இந்த செய்தி குறிப்பிடப்பட்டது.அவ்வப்போது சில சர்ச்சை தகவல்கள் விக்கிபீடியாவில் ஹேக்கர்களால் ஊடுருவி பதிவேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.
பின் தகவலை நீக்கிய விக்கிபீடியா தற்போது திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் என குறிப்பிட்டுள்ளது.
DINASUVADU