திமுக தலைவர் பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார் மு.க. ஸ்டாலின்.
திமுக தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் வரும் 26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
அதேபோல் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.
அதேபோல் காலை 9 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.மேலும் தி.மு.க தலைவர் பதவிக்கான வேட்புமனுவை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசிபெற்றார்.
பின் கோபாலபுரம் இல்லத்தில் தயாளு அம்மாளிடம் திமுக தலைவர் பதவிக்கான வேட்புமனுவை கொடுத்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின். அதேபோல் திமுக தலைவர் பதவிக்கான வேட்புமனுவை கழக பொதுச்செயலாளர் அன்பழகனிடம் கொடுத்து ஆசி பெற்றார்.
இதன் பின் திமுக தலைவர் பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்ய அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார் மு.க.ஸ்டாலின். திமுக தலைவர் பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார் மு.க. ஸ்டாலின். அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். மு.க. ஸ்டாலின் திமுக நிர்வாகிகள் ஐ.பெரியசாமி டி.ஆர்.பாலு, வி.பி. துரைசாமி உடனிருந்தனர்.
DINASUVADU
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…