திமுக தலைவர் பதவி அவருக்கு ..!பொருளாளர் பதவி இவருக்கா …!
துரைமுருகன் திமுக பொருளாளர் பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
திமுக தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் வரும் 26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
அதேபோல் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.
அதேபோல் காலை 9 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.மேலும் தி.மு.க தலைவர் பதவிக்கான வேட்புமனுவை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசிபெற்றார்.
பின் கோபாலபுரம் இல்லத்தில் தயாளு அம்மாளிடம் திமுக தலைவர் பதவிக்கான வேட்புமனுவை கொடுத்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின். அதேபோல் திமுக தலைவர் பதவிக்கான வேட்புமனுவை கழக பொதுச்செயலாளர் அன்பழகனிடம் கொடுத்து ஆசி பெற்றார்.
இதன் பின் திமுக தலைவர் பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்ய அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார் மு.க.ஸ்டாலின். திமுக தலைவர் பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார் மு.க. ஸ்டாலின். அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். மு.க. ஸ்டாலின் திமுக நிர்வாகிகள் ஐ.பெரியசாமி டி.ஆர்.பாலு, வி.பி. துரைசாமி உடனிருந்தனர்.துரைமுருகன் திமுக பொருளாளர் பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
ஆனால் நேற்று மு.க.அழகிரி பேசுகையில் , அண்ணா, கருணாநிதி ஆகியோர் வளர்த்த திமுகவில் சேருவதற்கு கதவை தட்டுவதில் எந்தவித தவறும் இல்லை என்றார்.
சென்னையில் வரும் 5ம் தேதி தமது தலைமையில் நடக்கும் அமைதிப் பேரணி, திமுகவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார். இதன் பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன் என கூறியுள்ள மு.க.அழகிரி, திமுகவில் தம்மை சேர்க்காவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி படுதோல்வியை சந்திக்கும் என்றும் எச்சரித்தார்.
DINASUVADU