திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார்!மு.க. அழகிரி
திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார் என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
இன்று 10ஆவது நாளாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.
இன்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி.,உதயநிதி ஸ்டாலின்,கருணாநிதி மனைவி தயாளு அம்மாள்,தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்ட காவேரி மருத்துவமனைக்கு சென்றனர்.மேலும் தயாளு அம்மாளுடன் மு.க.தமிழரசு, துரை தயாநிதி, அருள்நிதி உள்ளிட்டோரும் காவேரி மருத்துவமனைக்கு சென்றனர். திடீரென்று அனைவரும் வருவதால் அங்கு சிறிது பதற்றம் ஏற்பட்டுள்ளது.தயாளு அம்மாள் மருத்துவ மனைக்கு வருவது இதுவே முதல் முறை ஆகும்.இதேபோல் மு.க.அழகிரியும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மு.க. அழகிரி பேசுகையில், திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்