திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் இருந்து கனிமொழி இல்லத்திற்கு சென்றார் !
தனது மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான மு.க.கனிமொழி வீட்டிற்கு திமுக தலைவர் கருணாநிதி சென்று திரும்பினார்.
சென்னை கோபாலபுரத்தில் மருத்துவ ஓய்வில் இருந்து வரும் திமுக தலைவர் கருணாநிதி, குறிப்பிட்ட கால இடைவெளிகளில், திமுக தலைமை அலுவலகம், சிஐடி காலனி இல்லம், மு.க.தமிழரசு இல்லம் ஆகியவற்றிற்கு சென்று வருகிறார். இந்த வகையில், கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் இருந்து, சிஐடி காலனியில் உள்ள தனது மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான, கனிமொழி இல்லத்திற்கு சென்றுவிட்டு கோபாலபுரம் திரும்பினார். கருணாநிதியின் துணைவியார் ராசாத்தியம்மாளின் பிறந்தநாளை முன்னிட்டு கருணாநிதி சி.ஐ.டி.காலனி இல்லத்திற்கு சென்றுள்ளார்.மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.