திமுக தலைவராக ஸ்டாலின் மாறியது மட்டும் அல்லாமல் பாஜக தலைவருக்கு அண்ணனாக மாறிய ஸ்டாலின் …!
ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை அவரை அண்ணன் என்று கூறியுள்ளார்.
நேற்று மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன் பின் திமுக தலைவராக மு.க.ஸ்டாலினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பொதுச்செயலாளர் க.அன்பழகன்.இதனால் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.அதேபோல் திமுக பொருளாளராக துரைமுருகன் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டார்.
மேலும் திமுக செயல் தலைவர் பதவிக்கான கட்சி விதி பிரிவு 4 நீக்கப்பட்டதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
இதன் பின் திமுக தொண்டர்கள் அனைவரும் ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து இனிப்புகள் வழங்கியும்,பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் எதிரும் புதிருமாக இருந்த பாஜக தற்போது திமுகவிடம் நெருக்கம் காட்டி வரும்நிலையில்,ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை அவரை அண்ணன் என்று கூறியுள்ளார்.
அவர் கூறுகையில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவராகத்தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கு என் வாழ்த்துகள்..தனயனாக பணியாற்றி இன்று தலைவனாக உயர்ந்திருக்கிறார்என்று கூறியுள்ளார்.
DINASUVADU
திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவராகத்தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்..அண்ணன் ஸ்டாலின்அவர்களுக்கு என் வாழ்த்துகள்..தனயனாக பணியாற்றி இன்று தலைவனாக உயர்ந்திருக்கிறார்….
— Dr Tamilisai Soundararajan (மோடியின் குடும்பம் ) (@DrTamilisai4BJP) August 28, 2018