திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்…!

Default Image

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பின் திமுக தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் ஆகஸ்ட் 26ம் தேதி(அதாவது நேற்று முன்தினம் ) வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
Image result for DMK
 
அதேபோல் நேற்று முன்தினம் நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில் செயல் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
பின் இன்று நடைபெறும் தி.மு.க பொதுக்குழுவில் கூடி மனுவை ஆய்வு செய்து தலைவராக மு.க ஸ்டாலின் அறிவிக்கப்படுகிறார்.
இந்நிலையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு செல்வதற்கு முன் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார் மு.க.ஸ்டாலின்.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அண்ணா அறிவாலயம் செல்வதற்கு முன் தாய் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின்.
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. பொதுக்குழு கூட்டத்தில் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்  அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதிக்கு இரங்கல் குறிப்பை வாசித்தார் டிகேஎஸ் இளங்கோவன்.மேலும்  கருணாநிதிக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேபோல் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்,மறைந்த மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி,மறைந்த தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா,மறைந்த ஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னா,கேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மக்கள்,தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
Image result for KARUNANIDHI MK STALIN
 
அதேபோல்  அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கும் ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனுக்கும் பொதுக்குழுவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மேலும்  முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவு செய்தி கேட்டு மரணமடைந்த 248 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி என திமுக பொதுக்குழுவில் அறிவிப்பு வெளியிட்டது.
இதன் பின் திமுக தலைவராக மு.க.ஸ்டாலினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பொதுச்செயலாளர் க.அன்பழகன்.இதனால்  திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.அதேபோல் திமுக பொருளாளராக துரைமுருகன் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi