திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மத்திய நிதி ஆணைய ஆய்வு வரம்புகளை திருத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி , மத்திய நிதி அமைச்சர் மற்றும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுவதாகக் கூறும் மத்திய அரசு 5 ஆண்டுகள் மாநிலங்களின் சிறப்பான நிர்வாகத்துக்குத் தேவையான நிதி பகிர்வை பரிந்துரை செய்யும் மத்திய நிதி ஆணையத்திற்கு, ஆய்வு வரம்பை நிர்ணயிக்கும்போது ஜிஎஸ்டி கவுன்சில் மற்றும் மாநிலங்களின் ஆலோசனையை கேட்கவில்லை என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது கூட்டாட்சி தத்துவத்தை மீறுவது மட்டுமின்றி, சிறப்பாக செயல்படும் மாநிலத்தின் நிதி, சரியாக செயல்படாத மாநிலத்துக்கு கிடைக்கும் நிலையை ஏற்படுத்தி விட்டதாகவும் அவர் குறை கூறியுள்ளார்.
எனவே, மாநில நிதி தன்னாட்சிக்கு எதிராக பாரபட்சமாக வகுக்கப்பட்டுள்ள மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்புகளை மாநிலங்களுடனும், ஜிஎஸ்டி கவுன்சிலுடனும் கலந்தாலோசித்து திருத்தியமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் தமிழக முதலமைச்சர் உள்பட 10 மாநில முதலமைச்சர்களுக்கும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…
சென்னை : நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும்…