காங்கிரஸ்வுடன் கூட்டணியில் சேர்வது குறித்து முடிவெடுப்போம் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின் பன்னீர்செல்வம் ஆட்சி,தற்போது பழனிசாமி ஆட்சி அந்த நாட்களின் குறுக்கே,பன்னீர்செல்வம் பிரிந்து சென்று ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .
இதனால் தினகரன் தானக்கென 18 எம்.எல்.ஏக்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் பொதுச்செயலாளர் சசிகலா ஆவார்.
இந்நிலையில் சமீபத்தில் தினகரன் திமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுடன் இணைந்து செயல் படமாட்டோம் , கூட்டணியும் வைக்கமாட்டோம், வைக்கவும் முடியாது.திமுக எம்ஜிஆர் காலத்தில் இருந்து எங்கள் அரசியல் எதிரி கட்சி தான். அம்மாவின் வழியும் அதுவே. அந்த வழியில் தான் நாங்களும் பயணிப்போம்.
பாஜக ஒரு மதவாத கட்சி, எனவே பாஜக உடன் என்றைக்குமே கூட்டணி இல்லை.இதை நான் ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன்.இதை நான் தினமும் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைக்காதீர்கள், அதுபோல் கேள்வியும் இனி கேட்காதீர்கள் என்றும் ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி .தினகரன் கூறினார்.
இந்நிலையில் தற்போது பெங்களூருவில் சசிகலாவை சந்திக்க டிடிவி தினகரன் சென்றார்.இதன் பின்னர் பேசிய அவர் ,காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து விலகி எங்களை அணுகினால் கூட்டணியில் சேர்வது குறித்து முடிவெடுப்போம்.நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அமமுக கூட்டணி அமைக்காது என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…