திமுக – காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசன் …!நான் சொன்னால் தான் சிக்னல்…!கமல்ஹாசன் அதிரடி
நான் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் சேர்வதாக திருநாவுக்கரசர் கூறினால் எப்படி சரியாக இருக்கும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நான் சொன்னால் தான் சிக்னல்” என்னிடம் இருந்து கூட்டணிக்கு சிக்னல் வந்ததாக திருநாவுக்கரசர் கூறுவது செய்தி மட்டும்தான்
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையை ஏற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சிக்னல் என திருநாவுக்கரசர் கூறியதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்
கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி பெங்களூருவில் சசிகலாவை சந்திக்க டிடிவி தினகரன் சென்றார்.இதன் பின்னர் பேசிய அவர் ,காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து விலகி எங்களை அணுகினால் கூட்டணியில் சேர்வது குறித்து முடிவெடுப்போம்.நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அமமுக கூட்டணி அமைக்காது என்று கூறினார்.
இதற்கு பதில் கூறிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்,காங்கிரஸ் தமிழகத்தில் பலமான கட்சியான திமுகவுடன் சேர்ந்து தொடர்ந்து செயல்படும்.மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையை ஏற்க சிக்னல் காட்டினார்.நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் தலைமையில் செயல்பட விசிக உள்ளிட்ட கட்சிகள் விருப்பம் என்றும் தெரிவித்தார்.
சமீபத்தில் கமல்ஹாசன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தார்.பின்னர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்றும் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் ,நான் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் சேர்வதாக திருநாவுக்கரசர் கூறினால் எப்படி சரியாக இருக்கும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை.
மேலும் நான் சொன்னால் தான் சிக்னல்” .என்னிடம் இருந்து கூட்டணிக்கு சிக்னல் வந்ததாக திருநாவுக்கரசர் கூறுவது செய்தி மட்டும்தான்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.