திமுகவை மிரட்டி கூட்டணி வைக்கும் பாஜக…!தீவிர முயற்சியில் பாஜக தலைவர்கள் …!பகீர் தகவலை கூறிய மக்களவை துணை சபாநாயகர்
திமுகவை மிரட்டி கூட்டணி வைக்க பாஜக முயற்சிக்கிறது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.
இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.சோதனைக்கு பின்பு இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் 5 பேரும் வருகிற 20-ந்தேதி வரையில் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கரூரில் இது தொடர்பாக கூறுகையில்,திமுகவை மிரட்டி கூட்டணி வைக்க பாஜக முயற்சிக்கிறது.தமிழக பாஜக தலைவர்கள் திமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்கின்றனர். சிபிஐ, வருமானவரி சோதனை போன்ற அச்சுறுத்தல்களுக்கு அதிமுக அரசு பயப்படாது .ஆளுங்கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என சோதனைகள் நடப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.