திமுகவும் தினகரனும் வெற்றி பெற வாய்ப்பே இல்லை…!வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முதலமைச்சர் ஆலோசித்து விடை காண்பார் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து விடை காண்பார் .பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கான பரிந்துரை, தமிழக அரசின் இமாலய சாதனையாக பார்க்கப்படுகிறது.மேலும் இடைத்தேர்தலில் திமுக மற்றும் தினகரன் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.