சென்னையில் நடைபெறும் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவில்லை என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலமானார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழ் வணக்கக் கூட்டம் ஆகஸ்ட் 17, 19, 25, 26, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்தது.
திமுக தலைமை இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்,திருச்சியில் ஆகஸ்ட் 17இல் கருத்துரிமைக் காத்தவர் கலைஞர் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 19ஆம் தேதி மதுரையிலும், ஆகஸ்ட் 25ஆம் தேதி கோவையிலும்,ஆகஸ்ட் 26ஆம் தேதி திருநெல்வேலியிலும்,ஆகஸ்ட் 30ஆம் தேதி சென்னையிலும் கூட்டம் நடைபெறுகிறது என்று அறிவிப்பு வெளியிட்டது.
பின் ஆகஸ்டு 30 சென்னையில் நடைபெறும் கலைஞர் நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார்.திமுக நினைவேந்தல் நிகழ்ச்சியில் தேசிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் சென்னையில் நடைபெறும் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவில்லை.
அவர் அக்கூட்டத்தில் பங்கேற்காததில் மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார்.இவரது இந்த பதிவு சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல…
உடுமல்பேட்டை : பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி,…
மதுரை : தமிழக அரசு, இந்த முறை பொங்கல் சிறப்பு பரிசாக ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி,…
சென்னை : இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் பேமெண்ட் வசதிகளை…
சென்னை :வெண்டைக்காய் கிரேவி வித்தியாசமான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருள்கள்; வெண்டைக்காய் -300 கிராம் மிளகாய்…
எம்.எஸ்.தோனி : தற்போதுள்ள ஸ்மார்ட் போன் யுகத்தில் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டு மற்றும் திரைப்பட நட்சத்திரங்களும் சமூக…