திமுகவுக்கு வந்தால் தலைவர் நான்தான்…!திமுகவில் பதவிகள் விற்பனை…! மு.க.அழகிரி பகீர் தகவல்

Published by
Venu

நான் திமுகவுக்கு மீண்டும் வருவதை ஸ்டாலின் விரும்பவில்லை என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
கடந்த 27 ஆம் தேதி வயது மூப்பின் காரணமாக, கல்லீரல் பிரச்சினை, மூச்சு சம்மந்தப்பட்ட கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 11 நாட்களாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது .
Image result for முக ஸ்டாலின் முக அழகிரி
பின் கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார் என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.ஆகஸ்ட் 8 ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் நினைவு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.அங்கு பல்வேறு முக்கிய தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பின் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கருணாநிதி மறைவிற்கு பின்  திமுக செயற்குழு கூட்டம்:
திமுக அவசர செயற்குழுக் கூட்டம்  நாளை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைந்த நிலையில் அந்த தலைமை பதவி காலியாக உள்ளது.ஏற்கனவே மு.க.ஸ்டாலின் செயல் தலைவர் பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்  இன்று சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் மு.க.அழகிரி அஞ்சலி செலுத்தினார்.

கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் அழகிரி கூறுகையில்,கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர.நான் திமுகவில் இல்லை, செயற்குழு குறித்து எதுவும் கூற முடியாது.என்னுடைய ஆதங்கம் குடும்பத்தை பற்றியது அல்ல, கட்சியை பற்றியது.என்னுடைய ஆதங்கத்தை அப்பாவிடம் தெரிவித்துள்ளேன்.எனது ஆதங்கம் என்ன என்பதை பின்னர் அனைவரும் அறிந்து கொள்வீர்கள் என்று அதிரடியாக தெரிவித்தார்.

இதன் பின்னர் ஆங்கில தொலைகாட்சி ஒன்றுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில்,மு.க.ஸ்டாலினுக்கு நான்  தி.மு.க-வுக்குள் வருவதில் விருப்பமில்லை. நான் திமுகவுக்கு வந்தால் வலிமையான தலைவராகி விடுவேன் என அச்சப்படுகிறார்கள். திமுகவில் கட்சிப்பொறுப்புகள் விற்கப்படுகின்றது. திமுக தலைவர்கள் பலர் ரஜினிகாந்துடன் தொடர்பில் இருக்கிறார்கள் .இப்போம் உள்ள  கட்சியின் தலைமை தி.மு.க-வை சீரழித்துவிடும் என்றும் கோவமாகவும் தெரிவித்துள்ளார்.
DINASUVADU

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

10 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago