ஆகஸ்ட் 14ம் தேதி திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கடந்த 27 ஆம் தேதி வயது மூப்பின் காரணமாக, கல்லீரல் பிரச்சினை, மூச்சு சம்மந்தப்பட்ட கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 11 நாட்களாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது .பின் கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார் என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.ஆகஸ்ட் 8 ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் நினைவு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.அங்கு பல்வேறு முக்கிய தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
பின் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஆகஸ்ட் 14ம் தேதி திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திமுக அவசர செயற்குழுக் கூட்டம் வரும் 14ஆம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் .மேலும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பின் நடக்கும் முதல் செயற்குழு கூட்டம் ஆகும்.
தற்போது திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைந்த நிலையில் அந்த தலைமை பதவி காலியாக உள்ளது.ஏற்கனவே மு.க.ஸ்டாலின் செயல் தலைவர் பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அவருக்கு தான் தலைவர் பதவி அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மு.க.அழகிரியும் கட்சியின் பதவிக்கு அவ்வப்போது கொக்கி போட்டு வருகிறார்.இதில் அவருக்கும் ஏதாவது இடம் இருக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…