திமுகவில் தொடங்குகிறதா அதிகாரப்போட்டி?வெல்லப்போவது மு.க.ஸ்டாலினா?மு.க.அழகிரியா?

Default Image

ஆகஸ்ட் 14ம் தேதி திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Image result for மு.க.ஸ்டாலின்  கருணாநிதி
கடந்த 27 ஆம் தேதி  வயது மூப்பின் காரணமாக, கல்லீரல் பிரச்சினை, மூச்சு சம்மந்தப்பட்ட கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 11 நாட்களாக  திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது .பின் கடந்த 7 ஆம் தேதி  தி.மு.க தலைவர் கலைஞர் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார் என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.ஆகஸ்ட் 8 ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் நினைவு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.அங்கு பல்வேறு முக்கிய தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
பின் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஆகஸ்ட் 14ம் தேதி திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திமுக அவசர செயற்குழுக் கூட்டம் வரும் 14ஆம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் .மேலும் தலைமை  செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது  திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பின் நடக்கும் முதல் செயற்குழு கூட்டம் ஆகும்.
தற்போது திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைந்த நிலையில் அந்த தலைமை பதவி காலியாக உள்ளது.ஏற்கனவே மு.க.ஸ்டாலின் செயல் தலைவர் பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அவருக்கு தான் தலைவர் பதவி அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
Image result for மு.க.அழகிரி கருணாநிதி
மேலும் மு.க.அழகிரியும் கட்சியின் பதவிக்கு அவ்வப்போது கொக்கி போட்டு வருகிறார்.இதில் அவருக்கும் ஏதாவது இடம் இருக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்