இன்று மு.க.அழகிரி கூறிய கருத்தால் திமுகவில் அதிகாரப்போட்டி தொடங்கியுள்ளது.
கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார் என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கருணாநிதி மறைவிற்கு பின் திமுக செயற்குழு கூட்டம்:
திமுக அவசர செயற்குழுக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைந்த நிலையில் அந்த தலைமை பதவி காலியாக உள்ளது.ஏற்கனவே மு.க.ஸ்டாலின் செயல் தலைவர் பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின் இன்று சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் மு.க.அழகிரி அஞ்சலி செலுத்தினார்.
கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் அழகிரி கூறுகையில்,கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர.நான் திமுகவில் இல்லை, செயற்குழு குறித்து எதுவும் கூற முடியாது.என்னுடைய ஆதங்கம் குடும்பத்தை பற்றியது அல்ல, கட்சியை பற்றியது.என்னுடைய ஆதங்கத்தை அப்பாவிடம் தெரிவித்துள்ளேன்.எனது ஆதங்கம் என்ன என்பதை பின்னர் அனைவரும் அறிந்து கொள்வீர்கள் என்று அதிரடியாக தெரிவித்தார்.
மேலும் கோபாலபுரத்தில் மு.க.அழகிரி கூறுகையில் ,கட்சி ரீதியான ஆதங்கம் என்ன என்பதை இரண்டு, மூன்று நாட்களில் சொல்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்
இதன் பின்னர் ஆங்கில தொலைகாட்சி ஒன்றுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில்,மு.க.ஸ்டாலினுக்கு நான் தி.மு.க-வுக்குள் வருவதில் விருப்பமில்லை. நான் திமுகவுக்கு வந்தால் வலிமையான தலைவராகி விடுவேன் என அச்சப்படுகிறார்கள். திமுகவில் கட்சிப்பொறுப்புகள் விற்கப்படுகின்றது. திமுக தலைவர்கள் பலர் ரஜினிகாந்துடன் தொடர்பில் இருக்கிறார்கள் .இப்போம் உள்ள கட்சியின் தலைமை தி.மு.க-வை சீரழித்துவிடும் என்றும் கோவமாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் திமுகவில் இப்போதே பதவி போட்டியை மெரினாவில் இருந்து தொடங்கினார் மு.க.அழகிரி.
DINASUVADU
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…