திமுகவில் உருவானது அழகிரி புயல்…! திமுகவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் …!வைகைச்செல்வன் கருத்து
வானிலையில் மட்டுமின்றி திமுகவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என்று அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார் என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பின் இன்று சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் மு.க.அழகிரி அஞ்சலி செலுத்தினார்.
கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் அழகிரி கூறுகையில்,கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர.நான் திமுகவில் இல்லை, செயற்குழு குறித்து எதுவும் கூற முடியாது.என்னுடைய ஆதங்கம் குடும்பத்தை பற்றியது அல்ல, கட்சியை பற்றியது.என்னுடைய ஆதங்கத்தை அப்பாவிடம் தெரிவித்துள்ளேன்.எனது ஆதங்கம் என்ன என்பதை பின்னர் அனைவரும் அறிந்து கொள்வீர்கள் என்று அதிரடியாக தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது அழகிரி கருத்து குறித்து அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், வானிலையில் மட்டுமின்றி திமுகவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் திமுகவில் உருவாகியுள்ள புயலுக்கு ‘அழகிரி’ என்று பெயர் வைக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
DINASUVADU