திமுகவிற்கு மு.க.அழகிரி டார்கெட் …!1,00,000 தொண்டர்கள்..!செப்டம்பர் 5 ஆம் தேதி ..!பக்கா பிளான் உடன் களமிறங்கும் மு.க.அழகிரி
செப்டம்பர் 5 ஆம் தேதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு அமைதி பேரணி நடத்த உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார் என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
திமுக அவசர செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 14ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
செயற்குழுவிற்கு முன்னதாக சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் மு.க.அழகிரி அஞ்சலி செலுத்தினார்.
கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் அழகிரி கூறுகையில்,கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர.நான் திமுகவில் இல்லை, செயற்குழு குறித்து எதுவும் கூற முடியாது.என்னுடைய ஆதங்கம் குடும்பத்தை பற்றியது அல்ல, கட்சியை பற்றியது.என்னுடைய ஆதங்கத்தை அப்பாவிடம் தெரிவித்துள்ளேன்.எனது ஆதங்கம் என்ன என்பதை பின்னர் அனைவரும் அறிந்து கொள்வீர்கள் என்று அதிரடியாக தெரிவித்தார்.
இதன் பின்னர் ஆங்கில தொலைகாட்சி ஒன்றுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில்,மு.க.ஸ்டாலினுக்கு நான் தி.மு.க-வுக்குள் வருவதில் விருப்பமில்லை. நான் திமுகவுக்கு வந்தால் வலிமையான தலைவராகி விடுவேன் என அச்சப்படுகிறார்கள். திமுகவில் கட்சிப்பொறுப்புகள் விற்கப்படுகின்றது. திமுக தலைவர்கள் பலர் ரஜினிகாந்துடன் தொடர்பில் இருக்கிறார்கள் .இப்போம் உள்ள கட்சியின் தலைமை தி.மு.க-வை சீரழித்துவிடும் என்றும் கோவமாகவும் தெரிவித்தார்.திமுகவில் இப்போதே பதவி போட்டியை மெரினாவில் இருந்து தொடங்கினார் மு.க.அழகிரி.
இந்நிலையில் செப்டம்பர் 5 ஆம் தேதி மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு அமைதி பேரணி நடத்த உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
அண்ணா சாலையில் உள்ள அண்ணாசிலையில் இருந்து செப்டம்பர் 5 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி கருணாநிதி நினைவிடம் வரை செல்லும் இந்த பேரணியில், சுமார் 100000 பேர் வரை பங்கேற்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும்,மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உண்மையான தொண்டர்கள் தம் பக்கம் இருக்கிறார்கள் என்பதை இந்த அமைதி பேரணி மூலம் நிரூபித்து காட்டப்போவதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
DINASUVADU