திமுகவிற்காக அமித்ஷா சென்னை வந்தால் திமுகவுடனான கூட்டணியில் இது தான் நடக்கும் …!அதிரடி தகவலை கூறிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்

Default Image

கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டாலும் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் மாற்றம் வராது என்று  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
Image result for amit shah
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலமானார்.மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழ் வணக்கக் கூட்டம் ஆகஸ்ட் 17, 19, 25, 26, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்தது.
திமுக தலைமை இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்,திருச்சியில் ஆகஸ்ட் 17இல் கருத்துரிமைக் காத்தவர் கலைஞர் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 19ஆம் தேதி மதுரையிலும், ஆகஸ்ட் 25ஆம் தேதி கோவையிலும்,ஆகஸ்ட் 26ஆம் தேதி திருநெல்வேலியிலும்,ஆகஸ்ட் 30ஆம் தேதி சென்னையிலும் கூட்டம் நடைபெறுகிறது என்று அறிவிப்பு வெளியிட்டது.
ஆகஸ்டு 30 சென்னையில் நடைபெறும் கலைஞர் நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார்.திமுக நினைவேந்தல் நிகழ்ச்சியில் தேசிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Image result for bjp congres dmk
நினைவேந்தல் கூட்டத்தில்  அமித்ஷா  கலந்து கொள்வது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டாலும் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் மாற்றம் வராது என்று  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
Image result for thirunavukkarasar congress
மேலும் கருணாநிதி  நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்பதால், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகப் போவதாக அர்த்தமில்லை.நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்றாலும், பங்கேற்காவிட்டாலும் காங்கிரஸ் கட்சிக்கு எந்த அக்கறையோ, கவலையோ இல்லை என்று அதிரடியாக கூறியுள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்