தினமும் குடிநீர் விநியோகிக்கப்படும் : அமைச்சர் வேலுமணி
தற்போது தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிற நிலையில், இதற்க்கு பல வழிகளில் தீர்வு காணப்பட்டாலும், இன்னும் முழுமையான தீர்வு கிடைத்தபாடில்லை. இந்நிலையில், அமைச்சர் வேலுமணி அவர்கள், வேலூர் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தினமும் குடிநீர் கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ரயிலில் கொண்டு வரப்படும் குடிநீர் கீழ்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, பின்னர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.