தினகரன் மீதான பொதுநல மனு தள்ளுபடி-உயர்நீதிமன்றம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றதையடுத்து, அவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றதால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், அவர் சட்டசபைக்கு செல்ல தடை விதிக்க வேண்டுமென்றும் அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், இதனை தேர்தல் வழக்காகத் தான் தாக்கல் செய்ய வேண்டும் என கூறியதோடு, இந்தமனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.