தினகரன் தரப்பு ஆளுநர் மூலம் முதலமைச்சர் பழனிசாமி ஆட்சியை கலைக்க முயற்சி ..!சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் திடுக் தகவல்
3வது நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை தொடங்கியது.சபாநாயகர் தனபால் தரப்பில் 3ம் நாளாக நடைபெறும் விசாரணையில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதம் செய்து வருகின்றார்.
இதேபோல் பெற்று 2ஆம் நாள் வாதத்தில், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மற்றொரு மூத்த வழக்கறிஞரான மோகன் பராசரன் வாதிட்டனர்.இந்த விசாரணையில் டிடிவி தரப்பு வாதத்தில்,முதல்வர் பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டாலும் அதிமுக அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டோம். எதிர்க்கட்சியுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டதாக கூறுவது தவறு என்று வாதிட்டனர்.
இந்நிலையில் இன்று 3ம் நாளாக நடைபெறும் விசாரணையில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதம் செய்து வருகின்றார்.அந்த வாதத்தில் முதல்வரை எதிர்ப்பது என்பது அரசை எதிர்ப்பது போன்றதுதான். ஆளுநரை சந்தித்தது முதலமைச்சர் பழனிசாமி ஆட்சியை கலைக்கும் முயற்சிதான் என்று கூறியுள்ளார்.தொடர்ந்து அவர் வாதிட்டு வருகின்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.