திண்டுக்கல்-கரூர் வழித்தடத்தில் திடீரென நிறுத்தப்பட்ட ரயில்கள் …! உணவு, தண்ணீர் இன்றி தவிப்பு…!
திண்டுக்கல்-கரூர் ரயில் பாதையில் முன்னறிவிப்பின்றி 6 ரயில்கள் ஆங்காங்கே பல மணி நேரமாக நிறுத்தப்பட்டதால் உணவு, தண்ணீர் உள்ளிட்டவை கிடைக்காமல் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.
கரூர் – திண்டுக்கல் ரயில் பாதையில் திண்டுக்கல், ஈரோடு, வேடசந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 6 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 5 மணி நேரத்துக்கும் மேலாக ரயில்கள் நின்ற இடத்தை விட்டு நகராத நிலையில், உணவு, தண்ணீர் கிடைக்காமல் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.
இதுகுறித்து ஆங்காங்கே இருந்த நிலைய அலுவலர், கண்காணிப்பாளர் உள்ளிட்டோரிடம் கேட்டபோது, அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.