திண்டுக்கல் அருகே ரேஷன் கடையில் வழங்கப்பட்ட மண்ணெண்ணெயில் கலப்படம்!
நியாயவிலைக் கடையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வழங்கப்பட்ட மண்ணெண்ணையில் பெருமளவு தண்ணீர் கலந்துள்ளதாக பொதுமக்கள் புகார் கூறினர்.
அங்குள்ள மாட்டுப்பட்டி என்ற கிராமத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட மண்ணெணெணையில் பெருமளவு தண்ணீர் கலந்திருந்தாகக் கூறிய அப்பகுதி மக்கள், அங்கு தொடர்ந்து பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறினர்.
கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், முறைகேடுகள் தொடரும் பட்சத்தில் அனைவரும் தங்களது குடும்ப அட்டையை வட்டாச்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.