திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த போது அதில் சிக்கி இருந்தவர்களுக்கு உதவச் சென்ற கேரள வியாபாரி, அதே இடத்தில் மற்றொரு பேருந்து விபத்துக்குள்ளானதில் உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த விபத்துகளில் வியாபாரி உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இன்று அதிகாலை கேரளா மாநிலம் பத்தினம் திட்டாவிலிருந்து பெங்களூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து வேடசந்தூர் அருகே தம்மனம்பட்டி தேசியநெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்து சேதமடைந்தது.
இதில் உள்ளே உறக்கத்தில் இருந்த பயணிகள் பலர் படுகாயமுற்றனர். இருவர் உறக்கத்திலேயே பரிதாபமாக உயிரை விட்டனர். பலர் ரத்த காயங்களுடன் பேருந்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக யானை பொம்மைகளை டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றுக் கொண்டு கேரளா சென்று கொண்டிருந்த வியாபாரி சாஜி என்பவர் வாகனத்தை நிறுத்தி விட்டு பயணிகளை காப்பாற்றச் சென்றார். அப்போது அதே நேரத்தில் அதே இடத்தில், பெங்களூரு சென்ற மற்றுமொரு தனியார் பேருந்து சாலை ஓரம் இறங்கி தறி கெட்டு ஓடியது. அந்தப் பேருந்து மோதியதில் உதவி செய்யச் சென்ற சாஜி என்பவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் படுகாயமுற்ற 15 பேரை வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். தம்மனம்பட்டியில் நேற்று மழை பெய்த காரணத்தால் சாலை வழுக்கியதால் விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…
சென்னை: விடாமுயற்சி பொங்கல் பண்டிகை ரிலீஸில் இருந்து தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஒரு…
டெல்லி : பாலஸ்தீன நாட்டின் எல்லையில் உள்ள காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்குமான தாக்குதல் என்பது…
டெல்லி : விண்வெளியில் 2 செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நிறைவேறியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் 2 செயற்கைகோள்களை…
சென்னை : விஜய் சேதுபதி இன்று (ஜனவரி 16) தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும்…