மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி,கடந்த 2 நாட்களாக தொலைபேசியை எடுக்க முடியாத அளவிற்கு, மிரட்டல்கள் வருவதாக திடுக்கிடும் புகாரை தெரிவித்திருக்கிறார்.
சட்டப்பேரவையில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானிய கோரிக்கை மீதான பதிலுரையை தொடர்ந்து, சிறிது நேரம் உரையாற்றினார். சிறப்பாக நடைப்பெற்று வரும் ஆட்சியை கலைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் விமர்சனம் செய்வதாக தெரிவித்தார். முதலமைச்சர் என்றும் பாரமால் ஒருமையில் பேசுவதாகவும், அவ்வாறு கூறுபவர்களுக்கெல்லாம் பதவி வெறி தலைக்கேறிவிட்டதாகவும் தங்கமணி கூறினார். ஆட்சியிலிருந்து போன எதிர்கட்சியாவது பரவாயில்லை என்றும், ஆனால் தனி மனிதர்களுக்கெல்லாம் ஆட்சிக்கு வர வேண்டும் என ஆசை வருவதாக தங்கமணி தெரிவித்தார்.
தாம் ஜெயலலிதா முகத்தைக்காட்டி 48 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றதாகவும், ஒரு சிலரை போல் ஹவாலா பணமான, 20 ரூபாய் நோட்டைக்காட்டி வெற்றிப்பெறவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும் பூரண மதுவிலக்கு தான் அரசின் கொள்கை எனவும், ஆனால் சில சாராய ஆலை அதிபர்களும் மதுவிலக்குக்காக தம்மை விமர்சிக்கிறார்கள் என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார். செவ்வாய்க்கிழமை அன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற வாதத்திற்கு பின்னர், கடந்த 2 நாட்களாக, தொலைபேசியை எடுக்க முடியாத அளவிற்கு, குறுஞ்செய்தி வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தமக்கு மிட்டல்கள் வருவதாகவும் அமைச்சர் தங்கமணி கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…