திடீர் திருப்பம் …!வேட்பு மனு தாக்கல் செய்ய நான் ரெடி …!மு.க.அழகிரி அதிரடி

Published by
Venu

மு.க.ஸ்டாலின் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தது குறித்து மு.க.அழகிரி  கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன் பின் மெரினாவில் அஞ்சலி செலுத்தியவுடன் மு.க.அழகிரி கூறுகையில், கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர.என்னுடைய ஆதங்கம் குடும்பத்தை பற்றியது அல்ல, கட்சியை பற்றியது.என்னுடைய ஆதங்கத்தை அப்பாவிடம் தெரிவித்துள்ளேன் என்று பரப்பராக கூறினார்.
ஆனால் திமுக தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் வரும் 26ம் தேதி(அதாவது நேற்று ) வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
Related image
அதேபோல் நேற்று நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில்  செயல் தலைவராக இருந்த  மு.க ஸ்டாலின் போட்டியின்றி தலைவராக  தேர்வு செய்யப்பட்டார்.
பின் நாளை நடைபெறும்  தி.மு.க பொதுக்குழுவில் கூடி மனுவை ஆய்வு செய்து தலைவராக மு.க ஸ்டாலின் அறிவிக்கப்படுவார்.
ஆனால்  மு.க.அழகிரி தலைமையில் செப்டம்பர் 5 ஆம் தேதி மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு அமைதி பேரணி நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார்.
அவர் கூறுகையில், என்னை இணைப்பதாக தெரியவில்லை என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில், செப்டெம்பர் 5ஆம் தேதி பேரணிக்கு பிறகு அடுத்தக்கட்ட முடிவை அறிவிப்பேன். நேரம் வரும் போது எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவேன்.அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.
பின்னர்  மதுரை சத்ய சாய்நகர் வீட்டில் ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசனை ஈடுபட்டார் . மதுரை, நெல்லை, குமரி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த ஆதரவாளர்கள் ஆலோசனையில் பங்கேற்றனர்.அதில், செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள அமைதி பேரணியில், பலத்தை காட்டும் வகையில், கூட்டத்தை திரட்டுவது குறித்தும், தி.மு.க., பொதுக்குழுவில், ஸ்டாலினுக்கு எதிராக, போர்க்குரல் எழுப்புவது குறித்தும், ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.தொடர்ந்து  அழகிரி ஆலோசனை நடத்தினார்.
செய்தியாளர்களிடம் ஆலோசனைக்கூட்டத்திற்குப்பின் பேசிய மு.க.அழகிரி, அண்ணா, கருணாநிதி ஆகியோர் வளர்த்த திமுகவில் சேருவதற்கு கதவை தட்டுவதில் எந்தவித தவறும் இல்லை என்றார்.

சென்னையில் வரும் 5ம் தேதி தமது தலைமையில் நடக்கும் அமைதிப் பேரணி, திமுகவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார். இதன் பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன் என கூறியுள்ள மு.க.அழகிரி, திமுகவில் தம்மை சேர்க்காவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி படுதோல்வியை சந்திக்கும் என்றும் எச்சரித்தார்.
அதேபோல் நேற்றும் அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.அந்த ஆலோசனைக்கு பின்னர் மு.க.ஸ்டாலின் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தது குறித்து மு.க.அழகிரி கூறுகையில்,அது பற்றி என்னிடம்  ஏன் கேள்வி கேட்கிறீர்கள். அவரது வேட்பு மனுவுக்கு என்னை முன்மொழியச் சொல்கிறீர்களா என்று ஆவேசமாக பதில் கூறினார். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் இடைத் தேர்தல் வந்தால் வேட்பு மனு தாக்கல் செய்வேன் என்று அதிரடியாக கூறினார்.
DINASUVADU

Published by
Venu

Recent Posts

நாளை சென்னைக்கு கனமழை அலர்ட்…மின்தடை ஏற்படும் இடங்களை குறிச்சி வச்சிக்கோங்க!

சென்னை :  நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…

2 hours ago

நாளை நடைபெறவிருந்த அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…

2 hours ago

கனமழை எதிரொலி : திருச்சி பாரதிதாசன் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…

3 hours ago

நாளை ரெட் அலர்ட்! மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

மயிலாடுதுறை :  வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…

3 hours ago

நாளை கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கடலூர் :  வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…

4 hours ago

“அமரன் படம் சூப்பர் நண்பா”…இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய தளபதி விஜய்!

சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…

4 hours ago