நேற்று நடைபெற்ற கூட்டத்தில் திடீரென மு.க.அழகிரி வீட்டிற்கு பாஜக நிர்வாகிகள் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன் பின் மெரினாவில் அஞ்சலி செலுத்தியவுடன் மு.க.அழகிரி கூறுகையில், கருணாநிதியின் விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர.என்னுடைய ஆதங்கம் குடும்பத்தை பற்றியது அல்ல, கட்சியை பற்றியது.என்னுடைய ஆதங்கத்தை அப்பாவிடம் தெரிவித்துள்ளேன் என்று பரப்பராக கூறினார்.
ஆனால் திமுக தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் வரும் 26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதேபோல் மு.க.அழகிரி தலைமையில் செப்டம்பர் 5 ஆம் தேதி மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு அமைதி பேரணி நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார்.
அவர் கூறுகையில், என்னை இணைப்பதாக தெரியவில்லை என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில், செப்டெம்பர் 5ஆம் தேதி பேரணிக்கு பிறகு அடுத்தக்கட்ட முடிவை அறிவிப்பேன். நேரம் வரும் போது எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவேன்.அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் மதுரை சத்ய சாய்நகர் வீட்டில் ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசனை ஈடுபட்டார். மதுரை, நெல்லை, குமரி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த ஆதரவாளர்கள் ஆலோசனையில் பங்கேற்றனர். அதில், செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள அமைதி பேரணியில், பலத்தை காட்டும் வகையில், கூட்டத்தை திரட்டுவது குறித்தும், தி.மு.க., பொதுக்குழுவில், ஸ்டாலினுக்கு எதிராக, போர்க்குரல் எழுப்புவது குறித்தும், ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
நேற்று நடைபெற்ற கூட்டத்தில் திடீரென மு.க.அழகிரி வீட்டிற்கு மதுரை மாநகர் பாஜக மாவட்ட தலைவர் சசிராமன் மற்றும் பாஜக நிர்வாகிகள் வந்தனர்.மு.க.அழகிரி வீட்டிற்கு பாஜகவினர் திடீரென்று வந்ததால் அழகிரி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி மதுரைக்கு வரும் நிலையில் அதற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு மு.க.அழகிரிக்கு அழைப்பு விடுத்ததாக பாஜகவினர் தெரிவித்தனர்.
DINASUVADU
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…