தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மே 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் கூறியதாவது..ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தூத்துக்குடி மக்கள் கூட்டமைப்பு முடிவின்படி, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மே 22 ஆம் தேதி நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முழு கடையடைப்பு நடத்த வணிகர் சங்கங்களும் முடிவெடுத்துள்ளன. 22 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கியும், ஸ்டெர்லைட் ஆலை முன்பும் மக்கள் பெருந்திரளாகக் கூடி போராட்டம் நடத்த இருக்கிறார்கள் எனவும் அறவழியில் நடைபெறும் இந்த முற்றுகைப் போராட்டத்தை தடுத்தால், தூத்துக்குடி வட்டாரத்தில் உள்ள மத்திய, மாநில அரசுகளின் அலுவலகங்களை ஆங்காங்கே மக்கள் முற்றுகையிட்டு மாற்று போராட்டத்தை முன்னெடுப்பார்கள் எனவும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் . ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை போராட்டம் நடைபெறுகிறது. தூத்துக்குடியில் சார் ஆட்சியர்,எஸ்பி தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று மாலை தூத்துக்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்த பொதுமக்கள் கூறும் போது காலையில் ஆட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் என்ற பெயரில் நடைபெற்ற இந்தகூட்டத்தில் தங்கலுடைய சுய நலத்திற்காக பொதுமக்களிடம் கலந்து ஆலோசிக்காமல் எடுத்துள்ள முடிவை நாங்கள் ஏற்பதில்லை. திட்டமிட்டபடி நாளை மறுநாள் காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும் .
மேலும் அவர்கள் கூறும் போது போராட்டகுழு ஒருங்கிணைப்பாளர் பேரா.பாத்திமாபாபு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கொண்டு பொதுமக்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையான எடுத்துள்ள முடிவால் அவர்களை தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூடமைபிலிருந்து நீக்கம் செய்கிறோம் என்றும் கூறினர்….
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…