தாய்மார்களே கவனம்..!ஜான்சன் & ஜான்சன் பவுடர் புற்றுநோயை உண்டாக்கும்..!! நீதிமன்றத்தில் குவியும் வழக்குகள்..!!ரூ.32,364 கோடியை இழந்த ஜான்சன் & ஜான்சன் …!!!
ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் குழந்தைகளை மையப்படுத்தி விற்பணை செய்து வரும் ஒரு நிறுவனமாகும்.இந்த நிறுவனத்தால் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பணை செய்யப்பட்டு வரும் நிலையில் குழந்தைகளுக்கென்று விற்பணை செய்து வரும் பவுடரில் புற்றுநோய் ஏற்படுத்த கூடிய வேதிப்பொருட்கள் உள்ளது என்று நீண்ட காலமாகவே புகார்கள் எழுந்து வந்த நிலையில் நிறுவனமோ பவுடரில் அப்படி ஏதுமில்லை என்று மழுப்பி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது.
இந்நிலையில் தான் கடந்த 2017 ஆம் ஆண்டு ப்ளும்பெர்க் என்கிற செய்தி நிறுவனம் இது தொடர்பாக நடத்திய ஆய்வில் குழந்தைகள் பயன்படுத்தும் ஜான்சன் & ஜான்சன் பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் ஃபைபர் கலப்படங்கள் உள்ளது. அது புற்றுநோயை ஏற்படுத்தும் என்று ஒரு கட்டுரையும் வெளியிட்டது.
இதனால் இந்த ஜான்சன் & ஜான்சன் பவுடரை பயன்படுத்தும் தங்கள் குழந்தைகள் புற்றுநோயால் பாதிப்படைந்துள்ளதாக நீதிமன்றங்களில் பல வழக்குகள் தொடரப்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்து வந்த அமெரிக்க நீதிமன்றம் ஜூன் மாதம் 400 கோடி ரூபாய் அபராதமும் விதித்து கண்டனத்தையும் தெரிவித்தது.
ஆனால் தீர்ப்பு வருவதற்கு முன்பும் நீதிமன்றத்தில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் குழந்தைகள் பயன்படுத்தும் பவுடரில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய வேதிப்பொருள்கள் ஏதுமில்லை என மறுத்து வந்தது. இந்த சர்ச்சையை மேலும் வலுப்படுத்தும் விதமாக சென்ற வாரம் ரியூட்டர்ஸ் வெளியிட்ட செய்தியிலும் பவுடரில் புற்று நோய் ஏற்படுத்தக்கூடிய வேதிப்பொருட்கள் இருந்தது 10 ஆண்டுக்கு முன்பே ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு தெரியும் என்று குறிப்பிடப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.இது தொடர்பான கருத்தால் வெள்ளிக்கிழமை நியூயார்க் பங்குச் சந்தையில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பங்குகள் அனைத்தும் 11 சதவீதம் சரிந்து கடும் வீழ்ச்சியை சந்தித்தது.பங்குசந்தையின் இந்த வீழ்ச்சியின் மதிப்பானது 45 பில்லியன் டாலர் அதாவது ரூ.32,364 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் இதனை பயன்படுத்த தற்பொழுது தாய்மார்களும் தயக்கம் காட்டுகின்றனர்.