தாக்கி பேசுகிறேன் என்கிற பெயரில்..!தமிழகம்முழுவதும் என்னை பிரபலபடுத்துகிறார்.OPS..!டிடிவி தினகரன்..!!
திருவாரூரில் கண்டன போரட்டத்தில் பங்கேற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுசெயலார் டிடிவி தினகரன் என்னை தாக்கி பேசுகிறேன் என்கிற பெயரில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் என்னை தமிழகம் முழுவதும் பிரபலபடுத்துகிறார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கர்நாடகத்தில் பெய்த அதீத மழையால், அவர்கள் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட நீரை மக்களின் பயன்பாட்டுக்கு பயன்படுத்தாமல் தமிழக அரசு வீணாக்குகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.டெல்டா பகுதியில் மராமத்து பணிக்காக அரசு ஒதுக்கீடு செய்த கோடிக் கணக்கான பணம் எங்கே சென்றது என்று அரசுக்கு கேள்வியும் எழுப்பியுள்ளார்.ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் இவைகளை பராமரித்தாலே 500 டிஎம்சி தண்ணீர் சேமிக்கலாம் என தெரிவித்தார்.
DINASUVADU