”தல செய்த சேட்டை”, ”என்னுடைய தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித் ” பாதிக்கபட்ட தங்கையின் அண்ணன் கூறுகிறார்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் நடிகராக இருப்பவர் அஜித். இவருக்கு பொதுமக்கள் ரசிகர்களாக இருப்பதுபோல திரைப்பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். அஜித்துடன் தாங்கள் பழகிய அனுபவங்களை பற்றி கூறுகின்றனர்.அந்தவகையில் வாணி ராணி சீரியல் நடிகர் பப்ளு ப்ரித்விராஜ் கூறுகையில், நான் அஜித் நல்ல மனிதர். அஜித்துடன் என் தங்கைகள் படித்தனர்.
அப்போது என் தங்கையின் தலையில் பபுள்கம் ஒட்டுவது, இரண்டு ஷுவை கட்டிவிடுவது என அஜித் மிகவும் சேட்டை செய்கிறார் என்று வீட்டில் கூறினார்.ஆனால் எனக்கு இதை கேட்க பயம், பின்பு அஜித்துடன் பழகும்போது தான் அவரிடம் சொன்னேன் என்தங்கையை இப்படி செய்தாய் என்று.
அப்போதுதான் அஜித் சொன்னார். அது நான் இல்லை சார், அது அஜித் மேனன் என்ற பையன், நான் அஜித் குமார். நான் தான் அவரை காப்பாற்றுவேன் என்று கூறினார்.இப்போதும் கூட என் தங்கையிடம் எந்த உதவி என்றாலும் கேள் என அவர் நம்பர் கொடுத்துள்ளார் என்று ப்ரித்விராஜ் நெகிழ்ச்சியாக கூறினார்.
DINASUVADU