குடும்பத்தகராறு காரணமாக இரண்டு குழந்தைகளுடன் தலைமை காவலர் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கம்பம் பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் அழகுதுரை. கம்பம் வடக்கு காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு தலைமை காவலராக பணியாற்றிவருகிறார். இவருக்கும் இவரது மனைவி ஜெயமணி என்பவருக்கும் குடும்ப பிரச்சனைகள் இருந்துவந்துள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் 3 மணியளவில் பணி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார் அழகுதுரை.
வீடு பூட்டிக்கிடந்துள்ளது. மனைவி அவரது அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டார் என்று நினைத்து மீண்டும் காவல்நிலையத்திற்குச் சென்றுவிட்டு இரவு 7.30 மணிக்கு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போதும் வீடு பூட்டியே இருந்துள்ளது. சந்தேகமடைந்த அழகுதுரை, தனது மாமியார் வீட்டிற்குப் போன் செய்து விசாரித்துள்ளார். அங்கே ஜெயமணி வரவில்லை என்று கூறியுள்ளனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ஜெயமணி தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.
சடலத்தையும் விட்டு வைக்கமாட்டீங்களா..?
இறந்த ஜெயமணி மற்றும் அவரது குழந்தைகளின் உடல்கள் கம்பத்தைச் சேர்ந்த சிவா ஆம்புலன்ஸ் என்ற தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஆம்புலன்ஸ் உரிமையாளரான சிவா என்பவர், ஜெயமணியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியைப் பறித்துள்ளார்.
அதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள், சிவாவைக் கடுமையாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் பேசிய போது, “ஆம்புலன்ஸ் உரிமையாளர் சிவா கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆம்புலன்ஸ் லைசன்ஸ் ரத்து செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது” என்றார். இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சூழலில், இப்படி ஒரு சம்பவம் நடந்தது கம்பம் பகுதி மக்களை கொதிப்படைய வைத்துள்ளது.
DINASUVADU
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…