பலநூறு ஆண்டுகள் பழமையான கல்கோட்டைகள் மற்றும் சிற்பங்கலை தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள இடங்களில் புதையல் இருப்பதாக எண்ணி சேதப்படுத்தும் மர்ம நபர்களிடமிருந்து கோட்டையை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலக்கோடு அடுத்த வீரபத்திர துர்கம் சந்தைப்பேட்டை என்கிற இடத்திலுள்ள மலைக்கோட்டையில் வள்ளல் அதியமானுக்கு பிறகு ஆட்சி செய்த பல்வேறு சிற்றசர்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் தற்போது வரை அழியாமல் உள்ளன. இந்த மலைக்கோட்டையில்,பல்வேறு கோயில்களும், குளங்களும், அரிய வகை ஓவியங்களும் உள்ளன.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோட்டையில் மன்னர்கள் பயன்படுத்திய பொன், பொருட்கள் புதைந்திருக்க வாய்ப்புள்ளதாக பரவலாக வதந்தி உள்ளது. இதனையடுத்து அவற்றைக் கைப்பற்றும் நோக்கில் மர்ம நபர்கள் சிலர் இரவு நேரங்களில் வந்து கோட்டையில் உள்ள கல்கோட்டை, ஆயுத கிடங்கு, தானிய கிடங்கு உள்ளிட்ட பகுதிகளில் பள்ளம் தோண்டி சேதப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இங்குள்ள அரியவகை கல் சிற்பங்களையும் கொள்ளையடித்துள்ளாக கூறப்படுகிறது. மேலும் அங்குள்ள குளத்தில் புதையல் இருக்கும் என்ற எண்ணத்தில் அதனையும் சேதப்படுத்தி உள்ளனர். இதுபோன்ற நபர்களால் வரலாற்று சுவடுகள் அழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கோட்டைக்கு செல்லும் வழியில் இருந்த 7 நுழைவு வாயில்களில் 5 நுழைவு வாயில்கள் முற்றிலும் சேதடைந்துள்ளன. பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோட்டையை பாதுகாப்பதோடு இதனை சுற்றுலா தலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த…
சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த…
ஆந்திரா: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி என்ற பகுதியில் வசிக்கும் துளசி என்ற பெண்ணின் வீட்டிற்கு வந்த…
சென்னை : வந்துச்சே வசூல் மழை தான்...வந்துச்சே வசூல் மழை தான்... என்கிற அளவுக்கு புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலானது…