தர்மபுரி அருகே புதையல் இருக்கலாம் எனக் கருதி பழமையான கல்கோட்டைகளை பள்ளம் தோண்டி சிதைக்கும் மர்ம நபர்கள்!

Default Image

பலநூறு ஆண்டுகள் பழமையான கல்கோட்டைகள் மற்றும் சிற்பங்கலை   தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே  உள்ள இடங்களில் புதையல் இருப்பதாக எண்ணி சேதப்படுத்தும் மர்ம நபர்களிடமிருந்து கோட்டையை  பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலக்கோடு அடுத்த வீரபத்திர துர்கம் சந்தைப்பேட்டை என்கிற இடத்திலுள்ள மலைக்கோட்டையில் வள்ளல் அதியமானுக்கு பிறகு ஆட்சி செய்த பல்வேறு சிற்றசர்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் தற்போது வரை அழியாமல் உள்ளன. இந்த மலைக்கோட்டையில்,பல்வேறு கோயில்களும், குளங்களும், அரிய வகை ஓவியங்களும் உள்ளன.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோட்டையில் மன்னர்கள் பயன்படுத்திய பொன், பொருட்கள் புதைந்திருக்க வாய்ப்புள்ளதாக பரவலாக வதந்தி உள்ளது. இதனையடுத்து அவற்றைக் கைப்பற்றும் நோக்கில் மர்ம நபர்கள் சிலர் இரவு நேரங்களில் வந்து கோட்டையில் உள்ள கல்கோட்டை, ஆயுத கிடங்கு, தானிய கிடங்கு உள்ளிட்ட பகுதிகளில் பள்ளம் தோண்டி சேதப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இங்குள்ள அரியவகை கல் சிற்பங்களையும் கொள்ளையடித்துள்ளாக கூறப்படுகிறது. மேலும் அங்குள்ள குளத்தில் புதையல் இருக்கும் என்ற எண்ணத்தில் அதனையும் சேதப்படுத்தி உள்ளனர். இதுபோன்ற நபர்களால் வரலாற்று சுவடுகள் அழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கோட்டைக்கு செல்லும் வழியில் இருந்த 7 நுழைவு வாயில்களில் 5 நுழைவு வாயில்கள் முற்றிலும் சேதடைந்துள்ளன. பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோட்டையை பாதுகாப்பதோடு இதனை சுற்றுலா தலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்