தம்மை சபாநாயகர் தரக்குறைவாக நடத்தியதாக விஜயதாரணி குற்றச்சாட்டு!
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, சட்டப்பேரவையில் சபாநாயகர் தம்மை தரக்குறைவாக நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பேரவையில் தனது தொகுதிப் பிரச்சினையை எழுப்ப முயற்சி செய்த காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணிக்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். ஆனால் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த விஜயதாரணியை சபாநாயகர் உத்தரவின் பேரில் அவைக்காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்தித்து விஜயதாரணி தான் வெளியேற்றப்பட்டது குறித்து எடுத்துக் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.