தமிழ் மொழியை கற்பது கடினம், பிற மொழிகளை ஒரு மாதத்தில் கற்றுக்கொள்ளலாம்! மிஸ் இந்தியா அனுக்ரீத்தி
தமிழ் தெரிந்தால் எந்த மொழியும் கற்கலாம் என்று மிஸ் இந்தியா அனுக்ரீத்தி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், என்னை தைரியமான பெண்ணாக வளர்த்த, அழகிப் போட்டிக்கு ஊக்குவித்த எனது தாயாருக்கு நன்றி. உலக அழகிப்போட்டி முடிந்த பிறகே மீண்டும் படிப்பைத் தொடர்வேன்.உலக அழகிப் போட்டியில் வெல்வோர் பிறருக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்.
தமிழ் மொழியை கற்பது கடினம், பிற மொழிகளை ஒரு மாதத்தில் கற்றுக்கொள்ளலாம். தமிழ் கலாசாரம், அருமை தெரிந்தவர்களுக்கு அதன் முக்கியத்துவம் தெரியும்.தமிழகத்தை சேர்ந்தவர் இந்திய அழகியாக தேர்வானது மகிழ்ச்சி. தற்போது உலக அழகிப் போட்டிக்கு தயாராகி வருகிறேன், அதற்காக கவனம் செலுத்தி வருகிறேன் என்று மிஸ் இந்தியா அனுக்ரீத்தி தெரிவித்துள்ளார்.