கலைஞரின் பேனா தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியது. மூடப்பழக்கங்களை கேள்வி கேட்க என்றும் தயங்கியவர் இல்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழ்ந்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி,சோனிய காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகிய முதல்வர்கள் ஒரே மேடையில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் பொதுகூட்டத்தில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன் பெரியார், அண்ணா வழியில் சமூக சீர்திருத்தங்களை முன்னெடுத்தவர் கருணாநிதி திருநங்கைகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் உலகில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டவர் கருணாநிதி அரசியல், இலக்கியம், திரைத்துறை என எல்லாவற்றிலும் சாதனை படைத்தவர் என பினராயி விஜயன் புகழாரம் சூட்டினார்.
கலைஞர் தான் ஈடுபட்ட அனைத்து துறைகளிலும் தனக்கென முத்திரை பதித்தவர் தமிழ்மொழி உள்ளவரை தமிழர்கள் வாழ்வார்கள் தமிழர்கள் உள்ளவரை கலைஞரும் வாழ்வார் என கேரள முதல்வர் புகழாரம் சூட்டினார்.
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…