தமிழ் உள்ளவரை..! தமிழர்கள் உள்ளவரை கலைஞரும் வாழ்வார்..!கேரள முதல்வர் பினராயி புகழாரம்..!!

Default Image

கலைஞரின் பேனா தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியது. மூடப்பழக்கங்களை கேள்வி கேட்க என்றும் தயங்கியவர் இல்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழ்ந்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி,சோனிய காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகிய முதல்வர்கள் ஒரே மேடையில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் பொதுகூட்டத்தில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன் பெரியார், அண்ணா வழியில் சமூக சீர்திருத்தங்களை முன்னெடுத்தவர் கருணாநிதி திருநங்கைகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் உலகில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டவர் கருணாநிதி அரசியல், இலக்கியம், திரைத்துறை என எல்லாவற்றிலும் சாதனை படைத்தவர் என பினராயி விஜயன் புகழாரம் சூட்டினார்.
கலைஞர் தான் ஈடுபட்ட அனைத்து துறைகளிலும் தனக்கென முத்திரை பதித்தவர்  தமிழ்மொழி உள்ளவரை  தமிழர்கள் வாழ்வார்கள் தமிழர்கள் உள்ளவரை கலைஞரும் வாழ்வார் என கேரள முதல்வர் புகழாரம் சூட்டினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்