தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, தமிழ் மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து…!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, தமிழ் மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உலகின் மூத்தகுடி எனும் பெருமை கொண்ட தமிழ் மக்கள், ஆண்டாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக அரசு செயல்படுத்தி வரும் வளர்ச்சித் திட்டங்களையும், நலத்திட்டங்களையும் முறையாக பயன்படுத்தி, வலிமையும் வளமும் மிக்க தமிழ்நாட்டை படைக்க ஒன்றுபட்டு உழைக்குமாறு மக்களை எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இனிய புத்தாண்டில், தமிழர்கள் வாழ்வில் இனிமையும் மகிழ்ச்சியும் பொங்கட்டும் என்றும், நலமும் வளமும் பெருகட்டும் என்றும் அவர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.