தமிழ்நாட்டுல ரஜினிய பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்ட பாதிக்கப்பட்ட இளைஞர் !

Published by
Venu

நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றார். துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்திக்கிறார், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறினார்.நடிகர் ரஜினிகாந்த்.அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின்னர் முதல்முறையாக மக்கள் பிரச்னைக்காக களம் இறங்குகிறார் ரஜினிகாந்த்.

நலம் விசாரித்த பின் செய்தியாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் கூறியது:

தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவியுள்ளனர் .சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஜெயலலிதா அடைக்கி வைத்திருந்தார்.சமூக விரோதிகளை அடக்க ஜெயலலிதாவின் வழியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் குடியிருப்புகளை எரித்தது பொதுமக்கள் இல்லை, சமூக விரோதிகளே என்று ரஜினிகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் எண்ணம் நிர்வாகத்திற்கு வரவே கூடாது.

போராட்டம் நடத்தும் போது பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்களை சிலர் தூண்டிவிடுகின்றனர் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சமூகவிரோதிகள் உள்ளே வந்ததை கண்டுபிடிக்க தவறியது உளவுத்துறையின் தவறு

போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் சமூகவிரோதிகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். தொடர்ந்து போராட்டம் நடைபெற்றால் தமிழகத்தில் எப்படி தொழில்துறை வளர்ச்சி அடையும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் போல் இனி நிகழக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி என்றும் அறிவித்துள்ளார்.முதற்கட்டமாக 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கினார்.

கிட்டத்தட்ட 30 வருடங்களாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். நீண்ட காலமாக தமிழக அரசியலில் ரஜினிகாந்த் கால்பதிப்பார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில், கடந்த வருட இறுதியில் தான் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் ரஜினிகாந்த். ஆன்மிக அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள இவர் சமீபத்தில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கப் போவதாகவும், என்னைப் பார்த்தால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் கூறி இன்று மதியம் தூத்துக்குடி  வந்தடைந்தார்.

அப்போது பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் ரஜினிகாந்தைப் பார்த்து யார் நீங்கள் என்று கேட்டுள்ளார். ரஜினிகாந்த் சினிமாவில் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அடிக்கடி மாறுவேடம் அணிந்து நகர்வலம் சென்று மக்களின் நிலையை அறிந்துள்ளதாகவும், மாறுவேடமின்றி சென்றால் மக்கள் கூட்டம் சூழ்ந்து விடும் என்றும் கூறியுள்ளார். ஆனால் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்தைப் பார்த்து தூத்துக்குடி இளைஞர் நீங்கள் யார் என்று கேட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த இளைஞர் வேண்டுமென்று அப்படி கேட்டாரா? இல்லை சினிமாவில் இருக்கும் ரஜினிக்கும் நிஜத்தில் இருக்கும் ரஜினிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதால் அப்படி கேட்டாரா என்பது தெரியவில்லை.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 116 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

ராஜ்கோட்: மகளிருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 116 ரன்கள் வித்தியாசத்தில்இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள்…

23 minutes ago

வடம் இழுத்த அண்ணாமலை… அறுந்த கயிறு… பாய்ந்து பிடித்த பாதுகாவலர்கள்!

கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில்…

26 minutes ago

வாகை சூடிய அஜித்துக்கு பொழியும் வாழ்த்து மழை! பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை.!

சென்னை: துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் ரேஸின் 991 பிரிவில் மூன்றாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார்…

1 hour ago

இந்த 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

சென்னை: தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர்…

2 hours ago

இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை… 15ம் தேதி தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

14 hours ago

“மார்ச் 23ல் ஐபிஎல் தொடர் தொடக்கம்” பிசிசிஐ அறிவிப்பு!

டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…

15 hours ago