தமிழ்நாடு சட்டப்பேரவை தேதிக் குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
சபாநாயகர் தனபால், தமிழ்நாடு சட்டப்பேரவை தேதிக் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில், தமிழ்நாடு அரசின் 2018-2019ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரையில், கேள்வி பதில் நேரத்துடன், பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றன. கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று, கேள்வி நேரம் இன்றி, பட்ஜெட் மீது எதிர்க்கட்சி துணைத்தலைவர் உரையாற்ற, முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், இன்னபிற அமைச்சர்களும், பதில் அளித்தனர்.
அவ்வப்போது, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு, துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் பதில் அளித்தனர். 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் மருத்துவமனை நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்ட மசோதா, கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதா உட்பட 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.