தமிழ்நாடு எல்லையில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் ..!
கோவை மாவட்ட சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காரணம் கேரள எல்லையில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து,
குறிப்பாக ஆனைக்கட்டி, மாங்கரை பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில், இருசக்கர வாகனங்கள், பேருந்துகள் அனைத்தும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
சுந்தரி என்ற பெண் மாவோயிஸ்ட், உடல்நிலை சரியில்லாததால் கடந்த 3 நாட்களாக கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவை நகருக்குள்ளும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வனப்பகுதியில் புதிய நபர்கள் யாரேனும் தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கும் படி வனத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.