தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்களில் நீரில் கலந்த வி‌ஷம்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை..!

Default Image

அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழக நிபுணர்கள் இந்தியாவில் நிலத்தடிநீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆறுகள், கிணறுகள், குளங்கள் மற்றும் ஏரிகளில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

அதில் இந்தியாவில் உள்ள 16 மாநில நிலத்தடி நீரில் யுரேனியா வி‌ஷம் பரவி கிடப்பது கண்டறியப்பட்டது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் 324 கிணறுகளில் உள்ள தண்ணீரில் ஆய்வு நடத்தப்பட்டது. அவற்றில் மிக அதிக அளவில் யுரேனிய வி‌ஷம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் குடிநீரில் 30 மைக்ரோ கிராம் யுரேனியம் இருக்க வேண்டும். ஆனால் அது அளவுக்கு அதிகமாக உள்ளது. இத்துடன் சேர்த்து நைட்ரேட் மாசுவும் கலந்து உள்ளது.

பல மாநிலங்களில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரில் சரளை கற்கள், சேறு மற்றும் சகதி உள்ளிட்டவைகளின் கலவை உள்ளது. இவை யுரேனியம் அதிகம் உள்ள கிரானைட் பாறைகளில் இருந்து கிடைக்கிறது.

பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மே.வங்காளம், குஜராத், ஜார்கண்ட், சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநில நிலத்தடி நீரில் யுரேனிய வி‌ஷம் பரவியுள்ளது.

இத்தகைய நிலத்தடிநீர் குடிநீர் மட்டுமின்றி விவசாயத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் யுரேனியத்தின் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும். இதனால் உடல் நலக்கோளாறுகள் ஏற்படும். எனவே இப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரில் அதிக அளவில் யுரேனியம் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்