முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி உள்ளிட்ட பல்கலைக் கழக நிர்வாகிகள் 6 பேருக்கு தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழக மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கில், நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
சட்ட பல்கலை கழகத்தில் 2016-17ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. வெளிநாடுவாழ் இந்தியர்களுக்குரிய 74 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஆவணங்கள் பராமரிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி உட்பட நிர்வாகிகள் 6 பேர் மீது லஞ்சஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி, பல்கலைக் கழக நிதி இயக்குநர் ஜெய்சங்கர், தொலைதூரக்கல்வி இயக்குநர் ஷர்வானி, பதிவாளர் பாலாஜி, துணைப்பதிவாளர் அசோக் குமார், நிர்வாக அதிகாரி ராஜேஷ் ஆகியோர் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா 6 பேருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். ஒரு மாதத்திற்கு விசாரணை அதிகாரி முன் காலையும், மாலையும் ஆஜராகி கையெழுத்திடவும், பாஸ்போட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…
சென்னை : பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் பலரும் மெட்ரோ ரயில்களை புக்கிங் செய்து வருகிறார்கள். இந்த சூழலில், பொங்கல்…