தமிழோடு சேர்ந்தது தான் இந்தியாவின் நாகரிகம் : வைரமுத்து..!

Default Image
வெற்றி தமிழர் பேரவை தலைவரும், திரைப்பட பாடலாசிரியருமான கவிப்பேரரசு  வைரமுத்து தஞ்சையில்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்
தமிழை கழித்து விட்டால் இந்தியா கழிந்து போகும் என்று கூறினார்.
பின்பு பேசிய கவிப்பேரரசு  வைரமுத்து இந்தியா என்றால் இரண்டு மொழிகளின் கலாசாரத்தால் ஆனது என்றும் இதை அறிவியல் அறிஞர்களின் கூற்று எனவும், தெற்கே தமிழ், வடக்கே சமஸ்கிருதம் மொழிகள் பரவியுள்ளது என்றும் கூறினார்.
சமஸ்கிருதம் இன்றைக்கு வாழும் மொழி என்று சொல்ல முடியாது. இரண்டு மொழிகளில் வாழத்தக்க மொழி, வசிக்கத்தக்க மொழி தமிழ்.ஆதிமொழி , மிகப்பழமையான மொழி தமிழ் என்றும்  தமிழை கழித்து விட்டால் இந்தியா கழிந்து போகும் என அவர்கள் உணர வேண்டும். தமிழை சேர்த்து தான் இந்தியா என்று சாட்டையடி கூற்றை கூறினார்.
ஒருமைப்பாடு
தமிழ் இருந்தால் தான், இந்தியாவின் முழு முகம் தெரியும் என்பதை அறிஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே இணையவழிக்கு மாத்திரம் அல்ல. எந்த வழிக்கும் இந்தியாவின் ஒருமைப்பாடு தமிழை கழித்து விடக்கூடாது. தமிழோடு சேர்ந்தது தான் இந்தியாவின் ஒருமைப்பாடு. தமிழோடு சேர்ந்தது தான் இந்தியாவின் நாகரிகம். இதை மத்திய அரசு உணர்ந்து கொள்ளும் என்று நம்புகிறேன்.
நதிக்கரையில் நாகரிகம் பிறந்தது என்பது பழைய கூற்று. ஆனால் நதிக்கரையில் நாகரிகம் அழிய தொடங்குவது என்பது ஆபத்து. தண்ணீர் தான் மூன்றாம் உலகப்போருக்கு மூல காரணமாக இருக்க போகிறது என்பது கூற்று. அந்த கூற்று இந்தியாவில் தொடங்கி விடக்கூடாது என்பது தான் கவலையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்