தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க எதிர்ப்பு:இன்று அமைச்சர்கள் முதல்வருடன் ஆலோசனை!
இன்று அமைச்சர்கள் நீட் கருணை மதிப்பெண் விவகாரம் தொடர்பாக முதல்வருடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக தமிழில் நீட் தேர்வு எழுதிய 24000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் சத்யா என்ற மாணவர் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவால் கலந்தாய்வு மூலம் சேர்ந்த தனக்கு பாதிப்பு வரக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.